தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்பு சிம்பு, தற்பொழுது துல்கர்

1 mins read
1f958482-3602-43e9-aa09-cd8fac721e29
துல்கர் சல்மான், கமல்ஹாசன். - படம்: ஊடகம்

கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து முன்பு சிம்பு வெளியானார். தற்பொழுது துல்கர் சல்மான் வெளியாகி இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்தப் படத்தில் முன்பு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் தேசிங்கு பெரியசாமியின் படத்தில் நடிக்கத் தொடங்கியதால் அந்தப் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்திருந்தனர்.

துல்கர் சல்மான் கைவசம் சூர்யாவின் ‘புறநாணூறு’ திரைப்படம் உள்ளது. அப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். ‘தக் லைஃப்’ படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தால் வேறு வழியின்றி அப்படத்தில் இருந்து இவரும் விலகிவிட்டார்.

அதனால் அவருக்கு பதில் வேறு உச்ச நட்சத்திரத்தை தேடி வருகிறது இயக்குநர் மணிரத்னம் குழு.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்