வரும் வெள்ளிக்கிழமையன்று ஐந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.
மார்ச் 1ஆம் தேதியன்று 5 படங்கள் வெளியாயின. வரும் வெள்ளியன்றும் 5 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
‘அரிமாபட்டி சக்திவேல்’, ‘கார்டியன்’, ‘ஜே.பேபி’, ‘நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’, ‘சிங்கப்பெண்ணே’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இவற்றில் ‘கார்டியன்’ படத்தில் ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஒரு பேய்ப் படம்.
‘ஜே பேபி’ படத்தில் ஊர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்கள்தான் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ள படங்கள்.
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ புதுமுகங்கள் நடித்துள்ள படம். ‘அரிமாபட்டி சக்திவேல்’ படத்தில் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘சிங்கப்பெண்ணே’ படத்தில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

