விஜய் தேவரகொண்டாவின் ‘பேமிலி ஸ்டார்’

விஜய் தேவரகொண்டாவின் ‘பேமிலி ஸ்டார்’

1 mins read
b57397ae-99a5-440d-899a-4f0cf558e442
‘பேமிலி ஸ்டார்’ படத்தில் விஜய் தேவரகொண்டா. - படம்: ஊடகம்

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘பேமிலி’ ஸ்டார் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது.

‘கீதா கோவிந்தம்’, சர்க்காரு வாரி பட்டா’ படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் ‘பேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் ‘சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்டக்காட்சி தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்