மறைந்த நடிகர் விஜயகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவரது மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் ‘படைத்தலைவன்’ படத்தின் ஐந்து சண்டைக் காட்சிகளில் பின்னி எடுத்திருப்பதாகச் சொல்கின்றனர். படம் வெளிவரும்போது இந்தச் சண்டைக் காட்சிகள்தான் அவருக்குப் பெயர் வாங்கித் தரும் என்று கூறப்படுகிறது.
அடர்ந்து தொங்கும் தலை முடி, வெறித்த பார்வை, கட்டுடல் தோற்றத்தில் நடித்துள்ளார் சண்முகப் பாண்டியன். காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். நட்பே துணை படத்தை இயக்கிய அன்பு இயக்கியுள்ள படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் பார்த்திபன். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கிறார்கள்.
இந்தப் ‘படைத்தலைவன்’ கதையை விஜயகாந்த் கேட்டு, அவர்தான் வெள்ளைக்கொடி காட்டியிருக்கிறார். படத்தை ஏப்ரல் 14 அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

