சிம்பு நடிக்க இருந்த ‘கொரோனா குமார்’ படத்திலிருந்து அவர் விலகியதால் அவருக்குப் பதில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
‘கொரோனா குமார்’ படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர், சிலம்பரசன்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி முன்பணம் எல்லாம் வாங்கிய நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் தயாரிப்பாளருக்கும் சிம்புவிற்கும் பெரிய தகராறு ஏற்பட்டது.
அண்ணன்-தம்பி போல பழகி வந்த இருவரும் மீண்டும் முகத்தைக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சண்டையிட்டு பிரிந்தனர். இப்படத்தின் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா குமார் படத்தை இயக்குநர் கோகுல் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ரௌத்ரம்’, ‘சிங்கப்பூர் சலூன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.
‘கொரோனா குமார்’ படத்தில், சிம்புவிற்கு பதிலாக தற்போது ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த விஷ்ணு விஷால்தான் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

