தமன்னாவை வைத்து ரகசியமாக படப்பிடிப்பு நடத்தும் நீரஜ் பாண்டே

தமன்னாவை வைத்து ரகசியமாக படப்பிடிப்பு நடத்தும் நீரஜ் பாண்டே

1 mins read
9c11837a-9943-4133-ba6d-d6cc77bae2c0
தமன்னா. - படம்: ஊடகம்

படப்பிடிப்பு தளத்தில் இருந்து செய்திகள் வெளியே செல்வதைத் தடுக்க இயக்குநர் நீரஜ் பாண்டே ‘ஜாமர்’ கருவியைப் பயன்படுத்தி ரகசியமாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.

பிரபல இந்தி பட இயக்குநர் நீரஜ் பாண்டே. இவர் ‘எ வெட்னஸ்டே’, ‘ஸ்பெஷல் 26’, ‘எம்.எஸ்.தோனி’ உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். பல படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. ‘ஓடிடி’ தளம் ஒன்றுக்காகத் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ரகசியமாக நடத்தி வருகின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த தகவலும் வெளியே செல்லாமல் இருக்க, படப்பிடிப்பு நடக்கும் அரங்கத்தில் ‘ஜாமர்’ கருவியை பொருத்தியுள்ளனர்.

இதனால் அங்கிருந்து யாரும் தொலைபேசியில் படம் பற்றிய தகவலை வெளியே தெரிவிக்க முடியாது. அரங்கில் இருந்து புகைப்படங்கள் எடுக்கவும் முடியாது. அதைத் தடுக்கவே இந்த ஏற்பாட்டை இயக்குநர் செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்