தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் இந்தி படத்தில் யோகி பாபு

1 mins read
699282a3-f2b6-4429-84e4-f352858bbc53
யோகி பாபு. - படம்: ஊடகம்

இந்தியில் ஓரிரு படங்களில் சில காட்சிகளில் நடித்த யோகி பாபு தற்பொழுது இந்திப் படத்தில் அதிக காட்சிகளில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் யோகி பாபு தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக பல ஆண்டுகளாக கலக்கி வருகிறார்.

அண்மைக்காலங்களில் தமிழில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘ராஜா சாப்’ படத்தின் மூலம் யோகி பாபு தெலுங்கில் அறிமுகமாகிறார்.

இதுதவிர மலையாளத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே இந்தியிலும் ஓரிரு படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது பாலிவுட் இயக்குநர் அனிஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாகும் புதிய ஹாரர் த்ரில்லர் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவரது இயக்கத்தில் இந்தியில் இறுதியாக வெளிவந்த ‘புல் புல்லையா 2’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்