குடும்பப் பாங்காக புடவையில் ஜான்வி

குடும்பப் பாங்காக புடவையில் ஜான்வி

1 mins read
dcc103db-ed7b-416a-abc4-3d422d89b644
ஜான்வி. - படம்: ஊடகம்

தெலுங்கில் ஜான்வி நடிக்கும் ‘தேவரா’ படத்தின் சுவரொட்டியில் குடும்பப் பெண்ணாக புடவையில் இருப்பதைப் பார்த்து வலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அவரது அம்மாவின் தாய்மொழியான தெலுங்கில் ‘தேவரா’ படம் மூலம் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தின் அறிமுக காணொளி இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு 35 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன.

அவர் ‘தேவரா’ படத்தில் என்ன மாதிரியான தோற்றத்தில் இருப்பார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்த காணொளியில் ஜான்வி கபூர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர அறிமுக சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘தங்கம்’ என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் அதிகமான கவர்ச்சிப் படங்களை பதிவிடும் ஜான்வியை, இந்த சுவரொட்டியில் வெட்கத்துடன் கூடிய புன்னகையில், புடவையில் குடும்பப் பாங்கான பெண்ணாக காட்சியளிப்பதைப் பார்த்து வலைத்தளவாசிகள் பாராட்டி வருகிறார்கள்.

அடுத்து ராம்சரணின் 16வது படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜான்வி. அந்த சுவரொட்டியையும் பகிர்ந்து, “நன்றியுடன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்