ஒட்டுமொத்தமாக விலகிய கலைஞர்கள்

ஒட்டுமொத்தமாக விலகிய கலைஞர்கள்

1 mins read
3d6fd7ac-dc18-492f-91af-652134a0ded8
தொலைக்காட்சியில் பணிபுரிந்த கலைஞர்கள். - படம்: ஊடகம்

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வந்த குழுவினர் ஒட்டுமொத்தமாக அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகி விட்டனர்.

யதார்த்தமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை ‘மீடியா மேசன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வந்தது.

இந்த நிறுவனம் சார்பில் வெளியான நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’, ‘சூப்பர் சிங்கர்’, ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’ ஆகிய நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில், மீடியா மேசன்ஸ் நிறுவனம் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியை விட்டு விலகியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறோம். விஜய் தொலைக்காட்சியில் மட்டும்தான் நாங்கள் பணி புரிந்தோம். இது எங்களுடைய இரண்டாவது வீடு. ஆனால், இப்போது விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது,” என அதில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ‘குக் வித் கோமாளி’ இயக்குநர் பார்த்திபனும் விஜய் தொலைக்காட்சிக்கு ‘குட் பை’ சொல்லியிருக்கிறார்.

இவ்வாறாக விஜய் தொலைக்காட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு நிறுவனம் தனது கலைஞர் பட்டாளத்துடன் விஜய் தொலைக்காட்சியை விட்டு வெளியேறியது அந்த தொலைக்காட்சிக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்