ஹன்சிகா நடிப்பில் அண்மையில் உருவாகி உள்ள படம் ‘கார்டியன்’. முழுநீள திகில் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா.
“இதில் பேய் கதாபாத்திரத்துக்காக கண்களில் விதவிதமான லென்ஸ் பயன்படுத்தி நடித்தேன். அவற்றை அகற்றிய பிறகு அரைமணி நேரம் கண்ணே தெரியாது.
“இரண்டாம் பகுதிக்கான சில காட்சிகளை கல்லறைத் தோட்டத்தில் படமாக்கினர். இரவு 12 மணிக்கு மேல் அந்தக் காட்சிகளை எடுத்தபோது, அந்தரத்தில் தொங்கி பேய்களைப் போல் கத்திக் கொண்டிருப்பேன்,” என்று சொல்லும் ஹன்சிகா, இந்தப் படத்தில் அடிதடிக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.
சினிமாவுக்காக சண்டை போடுவது எளிதல்ல என்றும் இந்தச் சவாலில் தாம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி தருகிறது என்றும் கூறுகிறார்.
“பேய் வேடத்துக்காக எனக்கு சிறப்பு ஒப்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது என் முகத்தைப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது,” என்கிறார் ஹன்சிகா.