சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அமரன்’ திரைப்படத்தின் மின்னிலக்க உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று 55 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ‘அமரன்’ தான் ஆக அதிக தொகைக்கு விற்பனையாகி உள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
‘மாவீரன்’ படத்தின் மின்னலக்க உரிமைக்கு கிடைத்த தொகையை விட ‘அமரன்’ பட உரிமை இருமடங்கு அதிகத்தொகைக்கு விற்பனையாகி உள்ளது. இத்தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

