ஆரி நாயகனாக நடிக்கும் புதுப் படத்துக்கு ‘ரிலீஸ்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
சுந்தரபாண்டி இயக்குகிறார். தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார்.
படத்துக்குப் பூசை போட்ட கையோடு, படத்தைத் தொடங்கிவிட்டனர்.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.
தொடக்கம் முதல் இறுதி வரை, அடுத்து என்ன நடக்குமோ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் சுந்தரபாண்டி.
இந்தப் படத்தின் கதைக்களமும் தனக்கான கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார் ஆரி.


