தனுஷ் நடிக்கும் ‘குபேரா’; அறிமுக காணொளி வெளியீடு

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’; அறிமுக காணொளி வெளியீடு

1 mins read
25cd839d-20bb-41e8-a4e7-dc5b3f6f41d5
‘குபேரா’ படத்தில் தனுஷின் தோற்றம். - படம்: ஊடகம்

தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘குபேரா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தாம் நடிக்க உள்ள புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். ‘கேப்டன் மில்லர்’ படத்தையடுத்து ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார்.

மேலும், தனது சகோதரி மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்குகிறார்.

இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் தனுஷ்.

இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகும் 51வது படம் தென்னந்திய, இந்தி மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியும், அறிமுக காணொளியும் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்திற்கு ‘குபேரா’ என தலைப்பும் வைத்துள்ளனர். அழுக்கான, கிழிந்த ஆடையுடனும் தாடியுடனும் ஒரு பிச்சைக்காரரைப் போன்று தோற்றம் அளிக்கிறார் தனுஷ்.

அவரது தோற்றத்திற்கு நேர் எதிராக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்