மனக் காயங்களுக்குத்தான் சிகிச்சை தேவை: சமந்தா

மனக் காயங்களுக்குத்தான் சிகிச்சை தேவை: சமந்தா

1 mins read
fcb7b7d2-4fa0-4dcf-afdd-38cf9134e2ca
சமந்தா. - படம்: ஊடகம்

எப்போதுமே மனக் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதுதான் அவசியமாக இருக்கும் என்கிறார் நடிகை சமந்தா.

வெளியே தெரியும் பாதிப்பை விட மனதளவிலான உள் காயங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரை உலகில் இருந்து சிலகாலம் விலகி நின்றதற்கு தமது உடல்நிலை மட்டுமே காரணம் அல்ல என்றும் மனம் திறந்துள்ளார் சமந்தா.

“இது மிகவும் கடினமான முடிவாக இருந்தபோதிலும் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு சரியான முடிவை எடுத்திருப்பதாக நம்புகிறேன்.

“தன்னம்பிக்கையை இழந்திருந்த காலகட்டம் அது. அப்போது கிடைத்த ஓய்வை என்னை நானே செதுக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாகக் கருதினேன்.

“எனக்குள் இருந்த பாதிப்பை உணர்ந்ததால் தான் அதில் இருந்து குணமடைய முடிந்தது,” என்று சமந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சமந்தாவின் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தங்களை வியப்படைய வைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்