உணவகத் தொழிலில் அசத்தும் ஷில்பா ஷெட்டி

1 mins read
b58dde78-5e6c-4d8c-a1b7-5f3aefc4f16e
30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடிகையாக இருக்கிறார் ‌ஷில்பா. - படம்: ஊடகம்

மும்பை நகரில் பிரபலமான உணவகமாக மாறியுள்ளது நடிகை ஷில்பா ஷெட்டியின் உணவகம்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடிகையாக இருக்கும் அவர், அண்மையில் பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்.

மும்பை நகரில் உள்ள அவரது ‘பாஸ்டியன் உணவகம்’ தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.

சினிமாவில் கிடைத்த வருமானத்தை விட தற்போது இந்த உணவகத்தின் வழி அதிக வருமானம் கிடைப்பதாகவும் உணவகத்திற்கான முன்பதிவுகள் அதிக அளவில் இருப்பதாகவும் ஷில்பா ஷெட்டி கூறுகிறார்.

உணவகத் தொழில் தமக்கு மகிழ்ச்சி தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்