மலையாள நடிகர் பிருத்விராஜ் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், படத்தின் முன்னோட்டம் வாரயிறுதியில் வெளியானது. அதில் பிருத்விராஜ் பாலை வனத்தில் சிக்கித் தவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
கடின உழைப்பால் உடல் மெலிந்து காணப்படும் பிருத்விராஜ் நடிப்பை சமூக ஊடகம் வழி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
‘ஆடு ஜீவிதம்’ வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

