இந்திய அளவில் தற்போது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் பிரபலமாகி வருகிறது. ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி நட்பை வெளிகாட்டும் படமாக உள்ளது.
இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டினர்.
இந்நிலையில், இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை பிராப்தி எலிசபெத் என்பவர் இந்த குற்றச்சாட்டை சமூக ஊடகங்கள் வழியே தெரிவித்து உள்ளார்.
2021ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜானேமன் படத்தில் பிராப்தி நடித்திருக்கிறார். இது இயக்குநர் சிதம்பரத்துக்கு அறிமுக படம்.
பிராப்தியை இன்ஸ்டகிராமில் 200,000க்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். அவர் வெளியிட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், சிதம்பரம் பொடுவால் மீது பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

