மக்கள் ஆதரவு கோரும் மகேந்திரன்

மக்கள் ஆதரவு கோரும் மகேந்திரன்

1 mins read
149760e8-b3d0-49b8-bc2c-e52747ecddde
குழந்தை நட்சத்திரமாகப் பல முன்னணி நடிகர்களுடன் மகேந்திரன் நடித்துள்ளார்.  - படம்: ஊடகம்

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ள படம் அமீகோ கேரேஜ்.

இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன் சினிமாவை நினைத்து பயந்ததாகத் தெரிவித்தார்.

“இந்த 30 ஆண்டுகளாக எனக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்துவருகிறார்கள், அதற்கு நன்றி. கொவிட் காலத்தில் சினிமாவை நினைத்தும் எதிர்காலத்தையும் நினைத்தும் பயந்து விட்டேன்.அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார்.” என்றார் மகேந்திரன்

“பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப்படத்திற்கு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளோம் இப்படத்தைப் பார்த்து மக்கள் ஆதரவு தர வேண்டும்,” என்று தெரிவித்தார்.

அமீகோ கேரேஜ் படம் மார்ச் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மகேந்திரன் சிறுவயது முதலே தமிழ் படங்களில் நடித்து வருகிறார். குழுந்தை நட்சத்திரமாகப் பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். அண்மையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மகேந்திரன் பாராட்டுகளைப் பெற்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்