தனது நடிப்பை ரசித்து விமர்சிப்பவர்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதை விரும்பவில்லை என்கிறார் நடிகை டாப்சி.
தாம் தவறான, சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நீண்ட நாள் நண்பரை டாப்சி திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது.
இந்நிலையில், தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டால் அதற்கான தேதியை வெளிப்படையாகப் பகிர்வதில் தமக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்கிறார் டாப்சி.
“எனது உறவுகளிடம் எதையும் மறைக்காமல் நேர்மையாக இருக்கிறேன். திருமணம் நடக்கும்போது அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்.
“எனினும் எனது திருமணம் குறித்து ஒரு தரப்பினர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை,” என்கிறார் டாப்சி.

