ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் திரையிடப்பட்டன.
இதன் மூலம் அப்படத்திற்கு மீண்டும் ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து முடிந்துள்ளது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் இருந்து சில சண்டைக் காட்சிகள் தொகுக்கப்பட்டு திரையிடப்பட்டன.
அந்த வகையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சண்டைக் காட்சிகளும் இந்த சிறப்புத் தொகுப்பில் சில நொடிகள் இடம்பெற்றன.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் இக்காணொளியை ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு பகிர்ந்துள்ளது.
“மீண்டும் எங்களுக்கு ஓர் இனிமையான ஆச்சர்யம். உலகின் ஆகச்சிறந்த சண்டைக்காட்சிகளுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இடம்பெற்ற காணொளியில் ‘ஆர்ஆர்ஆர்’ காட்சிகள் இடம் பெற்றதில் மகிழ்ச்சி,” எனப் அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

