நிறைமாதக் கர்ப்பிணியான அமலாபால் தாம் நடித்துள்ள புதுப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலா. பிரித்திவிராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகிறது.
மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியீடு காணும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தன் கணவருடன் பங்கேற்றார் அமலா.
நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும்போது அவர் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து ஒரு தரப்பினர் சாடியுள்ளனர். எனினும் கணவருடன் சேர்ந்துதான் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதாகவும் மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகே இம்முடிவை எடுத்ததாகவும் அமலா தரப்பில் கூறப்படுகிறது.

