‘கஜினி’ பட இயக்குநருடன் இணையும் சிவா

‘கஜினி’ பட இயக்குநருடன் இணையும் சிவா

1 mins read
9e6dc610-7e75-472d-b30d-f3886d8b4041
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

தன்னை வெகுவாகப் பாதித்த படங்களில் ‘கஜினி’ படத்துக்கும் முக்கிய இடமுண்டு என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் அப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்துள்ளார் சிவா.

கிட்டத்தட்ட ‘கஜினி’ படத்தைப் போன்றே இந்த புதுப் படம் உருவாகிறதாம். இதில் தாம் ஏற்கும் கதாபாத்திரத்திற்காக, மாறுபட்ட உடல் மொழியைக் கச்சிதமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் தனியாகப் பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த மாறுபட்ட கதைக்களம் தனக்கு நிச்சயம் பாராட்டுகளைப் பெற்றுத் தரும் என்று நம்புவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் சிவா.

குறிப்புச் சொற்கள்