கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவியும் இணைந்துள்ளார்.
முன்னதாக அவரிடம் எவ்வளவு சம்பளம் என்று கமல் தரப்பில் கேட்டுள்ளனர்.
ஆனால் கமல்ஹாசன் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் மிகுந்த உற்சாகம் அடைந்த ஜெயம் ரவி, “ஊதியம், கால்ஷீட் குறித்தெல்லாம் கவலைப்பட வேண்டாம். நான் சரியான நேரத்துக்கு வந்துவிடுவேன்,” என்று சொல்லிவிட்டாராம் ஜெயம் ரவி.
இது குறித்து கேள்விப்பட்ட கமல்ஹாசன், ஆச்சரியப்பட்டு பெரிய தொகையை சம்பளமாக நிர்ணயித்தாராம்.