‘ரோலக்ஸ்’ படத்தை உடனே தொடங்க ரசிகர்கள் கோரிக்கை

1 mins read
5b3f31ee-177b-4fa6-bfdb-5ac5ac37f124
சூர்யா. - படம்: ஊடகம்

தனது ரசிகர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்த மறக்கமாட்டார் சூர்யா.

தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அவ்வப்போது சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது அவரது வழக்கம்.

நடப்பாண்டில் சென்னை, நெல்லை மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்த தனது ரசிகர் மன்றத்தினரை நேரில் அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தாராம்.

இந்தச் சந்திப்பின்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘ரோலக்ஸ்’ படத்தை உடனே தொடங்க வேண்டும் என ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்தனராம்.

குறிப்புச் சொற்கள்