‘தமிழனாகப் பிறந்தது தவறா’ என்ற கேள்விக்கு விடை தேடும் ‘ரெபல்’ திரைப்படம்

‘தமிழனாகப் பிறந்தது தவறா’ என்ற கேள்விக்கு விடை தேடும் ‘ரெபல்’ திரைப்படம்

1 mins read
d23a0383-4995-4ba8-bf8b-0594d604c863
‘ரெபல்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ரெபல்’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது.

இது சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பி உள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவுக்குச் சென்று படிக்கும் தமிழ் மாணவர்கள், அங்கு சில பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கின்றனர்.

அவற்றை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதம், பிரச்சினைகளில் இருந்து தப்பித்தார்களா என்பதுதான் கதையாம்.

கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கும் தமிழ் மாணவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்தக் காதல் என்னவானது என்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும் முன்னோட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கல்லூரிகளில் நடக்கும் அரசியலைத் தெளிவாகக் காட்டியுள்ளனர்.

‘நாங்க தமிழனா பொறந்தது தப்பா சார்’ என்பது போன்ற வசனங்கள் மூலம் இரு தரப்புக்குமான பிரச்சினைகளை இயக்குநர் அலசியுள்ளார் என்பதை உணர முடிகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

இப்படத்தில் மமிதா பைஜு, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, வெங்கடேஷ், ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்