சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் அஜித்.
இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகனுடைய பிறந்தநாளுக்காக சென்னை வந்த அஜித், ஒரு வார ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வெளிநாடு செல்வார் எனக் கூறப்பட்டது.
ஆனால், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மூளைப் பகுதியில் ஏதோ பிரச்சினை என்றும் ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில், அஜித்தின் காதுக்குக் கீழே உள்ள பகுதியில் சிறிய புடைப்பு கண்டறியப்பட்டதாகவும் அது சிக்கலின்றி நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஓரிரு நாள்களில் அஜித் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

