துருவ் விக்ரமுடன் ஜோடி சேரும் அனுபமா

1 mins read
e1fee15c-55f9-4104-9e0e-a13aa5274a92
படம்: - ஊடகம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘அப்ளாஸ் என்டர்டெய்மென்ட்’, நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

“இது என் ஐந்தாவது படம். இந்தப் படம் கபடி விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு விளையாட்டுத் தொடர்பான படமாக இருக்கும்,” என்றார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

“இந்தப் படத்தில் துருவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும் திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம், வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார்” என்றார் மாரி செல்வராஜ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்