தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வசூல் சாதனை

1 mins read
c5310adc-c68c-4804-8e79-77a4a231e0b3
படம்: - ஊடகம்

திரைக்கு வந்து மூன்று வாரங்களுக்கு மேலான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வசூலில் சாதனை செய்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

கதை ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் படம் வெற்றி பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

மலையாளப் படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் சிதம்பரம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவரைத் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்