ரஜினிக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்: ரித்திகா சிங்

ரஜினிக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்: ரித்திகா சிங்

படம்: ஊடகம்

14 Mar 2024 - 5:40 pm

1 mins read

ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார்.

இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை ரித்திகா சிங் சமூக ஊடகம் வழி பகிர்ந்துள்ளார். மேலும் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

“தற்போது ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று ரித்திகா சிங் பதிவிட்டார்.

தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் எனத் தெரிகிறது.

‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழகப் பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்