கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான படம் ‘பிரேமலு’. இந்தப் படம் வெளியான சில வாரங்களில் மக்கள் மனதை வென்றது. இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் இயக்கி, விஷ்ணுவிஜய் இசையமைத்துள்ளார்.
கேரளத்தில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கு மொழியிலும் மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
உலக அளவில் ரூ. 100 கோடியை வசூல் செய்தும் சாதித்தது. பல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரேமலு படம் தமிழ் மொழியிலும் வெளியாகவுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது. தமிழ் மொழியிலும் ப்ரேமலு படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

