‘குட் பேட் அக்லி’: அஜித் நடிக்கும் புதுப்படத் தலைப்பு

‘குட் பேட் அக்லி’: அஜித் நடிக்கும் புதுப்படத் தலைப்பு

1 mins read
c9a801e0-51d3-4129-a53e-5a12a10d6731
குட் பேட் அக்லி படச் சுவரொட்டி, அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன். - படங்கள் ஊடகம்

அஜித்தின் அடுத்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். இது அஜித்தின் 63வது படம் என்றும் தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது என்றும் புதிய அறிவிப்பு தெரிவிக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படத்தின் சுவரொட்டியில் முள் வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இது அதிரடி சண்டைகள் நிறைந்த படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, படம் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்