ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி, அதை வெளியிடும்போது அறவே இருப்பதில்லை என்று இயக்குநர் சமுத்திரகனி கூறியுள்ளார்.
தாம் படம் இயக்குவதை நிறுத்தியதற்கு இதுவே காரணம் என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கு முன்பு ‘அப்பா’ படத்தை எடுத்துவிட்டு, அதை வெளியிட படாத பாடுபட வேண்டியிருந்தது. அதேபோல் சாட்டை படத்தை உருவாக்கிய போதும் இதே நிலைமைதான் நீடித்தது.
“அதனால்தான் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்புக்கான வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினேன்,” என்று சமுத்திரகனி கூறியுள்ளார்.