ராஜமௌலி இயக்கத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஜப்பானில் வெளியீடு கண்டுள்ளது. படத்துக்கான திரையரங்க நுழைவுச் சீட்டுகள் பதிவு தொடங்கிய ஒரே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன.
இந்தப் படம் ஏற்கெனவே ஜப்பானில் வெளியாகிவிட்டது. படத்துக்கு நல்ல வசூல் கிடைத்த நிலையில், மார்ச் 18ஆம் தேதி தோக்கியோவில் உள்ள திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.
ரசிகர்களுடன் சேர்ந்து ராஜமௌலியும் படம் பார்க்கிறார்.
இந்நிலையில், சிறப்புக் காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள் ஒரு நிமிடத்திற்குள் விற்றுத் தீர்ந்துபோனதாக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

