நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படம் ‘பொன் ஒன்று கண்டேன்’.
ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். பிரபல ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் வெளியீடு குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வசந்த் ரவியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
திரையரங்குகளில் வெளியிடப்படும் என உறுதியளித்த ஜியா நிறுவனம், திடீரென தன் முடிவை மாற்றிக்கொண்டு இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது.
படத்துடன் சம்பந்தப்பட்ட யாருடனும் கலந்தாலோசிக்காமல், இவ்வாறு முடிவெடுத்திருப்பது வருத்தமும் வேதனையும் அளிப்பதாக வசந்த் ரவி கூறியுள்ளார்.
“ஒரு திரைப்படம் சம்பந்தப்பட்ட வணிக ரீதியிலான விவகாரங்களில் நடிகர்கள் தலையிட முடியாது. எனினும், இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை நேரடியாகவோ, சமூக வலைத் தளங்களின் மூலமாகவோ வெளியிடுவதே சரியானது.
“ஆனால், இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு படத்துக்காக உழைத்த எங்களுக்கு மரியாதை செலுத்திய தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி,” என்று வசந்த் ரவி குறிப்பிட்டுள்ளார்.

