தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைக்க ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் நடிகர் சூர்யா.
அதேபோல் பறவைகளின் தாகம் தீர்க்க, வீட்டு மொட்டை மாடியிலும், விலங்குகளின் தாகம் தீர்க்க ஏற்ற இடங்களிலும் தண்ணீர் தொட்டி அமைக்கும்படி சூர்யா கூறியுள்ளார்.

