வேதிகா நடிக்கும் புதுப்படம் ‘கஜானா’

வேதிகா நடிக்கும் புதுப்படம் ‘கஜானா’

1 mins read
2f7fc486-0f67-4b99-a87e-2d3bcbd97ccf
வேதிகா. - படம்: ஊடகம்

நடிகை வேதிகா நடித்துள்ள ‘கஜானா’ திரைப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியாகி உள்ளது.

பிரபதிஷ் சாம்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு, இனிகோ பிரபாகரன், சாந்தினி, ஹரிஷ், சென்றாயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அச்சுராஜா மணி இசையமைத்துள்ளார்.

ஒரு காட்டுப் பகுதிக்குள் பயணம் மேற்கொள்ள ஒரு குழுவினர் திட்டமிடுகின்றனர். காட்டுக்குள் நுழைந்ததும் சில மர்மமான சம்பவங்கள் நிகழ்கின்றன.

இதனால் குழுவில் உள்ள பலர் பீதியடையும் நிலையில், அனைவரும் எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதையாம்.

குறிப்புச் சொற்கள்