இசைத்தொகுப்பில் நடிக்கும் இயக்குநர் லோகேஷ்

இசைத்தொகுப்பில் நடிக்கும் இயக்குநர் லோகேஷ்

1 mins read
8ce31468-8feb-43ba-b2f6-69d9ae83e1b3
(இடமிருந்து) லோகேஷ், கமல், ஷ்ருதி. - படம்: ஊடகம்

புதிய இசைத்தொகுப்பு ஒன்றில் நடிக்க உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

கமல் மகள் ஷ்ருதி ஹாசன் இசையமைக்கும் இந்த தொகுப்பில் பல்வேறு நல்ல கருத்துகள் இடம்பெற்றுள்ளனவாம்.

லோகேஷுடன் கமலும் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போவாராம். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த இசைத்தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

சமூக ஊடகங்களில் ஏராளமானோர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்