தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இதுவரை யாரும் நடித்திராத பாத்திரத்தில் நித்யா

1 mins read
01ca95a2-a5b8-4dc6-be56-aba143717a9b
நித்யா மேனன். - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை நடித்திராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

கதைப்படி கதாநாயகி காதலில் தோல்வி அடைகிறாள். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.

“இதுவரை ஆண்களின் காதலை மையப்படுத்தியே தமிழ் சினிமாவில் படங்கள் வந்துள்ளன. அந்த வகையில், இந்த கதைக்களம் தமிழுக்கு புதிது.

“இதில் நித்யா தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்த இயலும். அந்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்,” என்கிறார் இயக்குநர்.

இந்நிலையில் தனுஷ் எழுதி இயக்கும் அவரது ஐம்பதாவது படமான ‘ராயன்’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்தாண்டு தெலுங்கில் ‘குமாரி ஸ்ரீமதி’ எனும் இணையத்தொடரிலும் ‘மாஸ்டர் பீஸ்’ எனும் மலையாள இணையத்தொடரிலும் நடித்திருந்தார் நித்யா மேனன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்