நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவியும் முன்னாள் நடிகையுமான லலிதகுமாரி தங்கு விடுதி ஒன்றை கட்டி வருகிறார்.
அங்குள்ள அறைகள் அனைத்தும் பழைய கிராமத்து வீடுகளை நினைவூட்டுவது போல் அமைந்துள்ளன. மேலும், அங்கு தங்குபவர்களுக்கு மண் சட்டியில் சமைத்து, மண் மணம் மாறாமல் உணவு வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அந்த தங்கு விடுதி அமைந்துள்ளது. மொத்தம் ஆறு ஏக்கரில் பெரிய கிராமம்போல் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தங்கு விடுதிக்கு ஏராளமான சுற்றுப்பயணிகள் வருவார்கள் என நம்புவதாகச் சொல்கிறார் லலிதகுமாரி.

