‘ரெபல்’ படத்தில் இணைந்து பணியாற்றிய அறிமுக இயக்குநர் நிகேஷும், கதாநாயகன் ஜி.வி.பிரகாஷூம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
‘ரெபல்’ படத்தை நிகேஷ் இயக்கியுள்ள விதம் ஜி.வி.பிரகாஷை வெகுவாக கவர்ந்துவிட்டதாம். எனவே ‘ரெபல்’ படம் முடிவதற்கு முன்பே இயக்குநர் நிகேஷுக்கு முன்பணம் கொடுத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
“நிகேஷுடன் பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. அவர் மிகுந்த திறமைசாலி என்பது அடுத்தடுத்த படங்களின் மூலம் உறுதியாகும்,” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

