இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு மார்ச் 19ஆம் தேதி (இன்று) வெளியாகிறது.
மாலை 4.30 மணியளவில் வெளியாகும் இக்காட்சித் தொகுப்பைக் காண ஆவலுடன் காத்திருப்பதாக சூர்யாவின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இப்படத்தில் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மொத்தம் பத்து மொழிகளில் இப்படம் உருவாகிறது.

