தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

25வது மணநாளை சிறப்பாகக் கொண்டாடிய அஜித், ஷாலினி

1 mins read
317e8492-400b-4a90-9110-c581000ee5a9
மனைவி ஷாலினி, குழந்தைகளுடன் அஜித். - படம்: ஊடகம்

நடிகர் அஜித், ஷாலினி தம்பதியர் தங்களுடைய 25வது திருமண நாளை மனநிறைவுடன் கொண்டாடி உள்ளனர்.

‘அமர்க்களம்’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்தது.

கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் ஷாலினி திரையுலகை விட்டு விலகினார்.

இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள சொகுசு தங்கு விடுதியில் இந்த நட்சத்திரத் தம்பதியர் திருமண நாளைக் கொண்டாடினர். அப்போது இருவரும் இணைந்து ‘கேக்’ வெட்டி மகிழ்ந்தனர்.

அச்சமயம் இருவருக்கும் மிகவும் பிடித்தமான ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

இந்தக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்ற.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி