பிரியாமணி நன்கொடையாக அளித்த இயந்திர யானை

பிரியாமணி நன்கொடையாக அளித்த இயந்திர யானை

1 mins read
15f00c85-bba3-49d4-87e8-35e31935ecaa
பிரியாமணி. - படம்: ஊடகம்

நடிகை பிரியாமணி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அண்மையில் கொச்சி நகரில் உள்ள கோவிலுக்கு அளவில் பெரிய ‘இயந்திர யானை’ ஒன்றை அவர் நன்கொடையாக அளித்துள்ளார்.

யானைகளுக்கு மனிதர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் சூழலில் ‘இயந்திர யானை’ என்ற புதிய முன்னெடுப்பை பிரபல ‘பீட்டா’ அமைப்பு மேற்கொண்டுள்ளது.

“உண்மையான யானைகளைக் கொண்டு நாம் செய்யக்கூடியவற்றில் பெரும்பாலானவற்றை இயந்திர யானை செய்துவிடும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் விலங்குகளுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாசார நடைமுறைகளையும், பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்,” என்கிறார் பிரியாமணி.

கேரளாவில் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது இயந்திர யானை இதுவாகும். பிரியாமணி அளித்துள்ள யானைக்கு ’மகாதேவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்