எனது கனவு நனவானது: உற்சாகத்தின் உச்சியில் மாதவன்

எனது கனவு நனவானது: உற்சாகத்தின் உச்சியில் மாதவன்

1 mins read
daf036f4-e9a9-4389-92b6-3e445ca62b48
மாதவன். - படம்: ஊடகம்

நடிகர் மாதவன் புதிதாக படகு ஒன்றை வாங்கியுள்ளார்.

துபாயில் அவர் ஏற்கெனவே விலை உயர்ந்த வீடு ஒன்றை வாங்கியது ரசிகர்களுக்குத் தெரியும்.

இந்நிலையில், படகு வாங்குவது தமது நீண்ட நாள் கனவு களில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“படகை ஓட்டுவதற்கென சிறப்புப் பயற்சியும் ‘கேப்டன்’ உரிமமும் பெற்றுள்ளேன்.

“மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய வீடு தேவையா என்று சிலர் கேட்கக்கூடும். தேவை இல்லை என்பதே எனது பதில்.

“ஆனால் அந்த வீட்டை விட நான் வாங்கிய படகைத்தான் அதிகம் நேசிக்கிறேன். இரவு நேரங்களில் அப்படகில் கடலுக்குச் சென்று அமைதியான சூழலில் கதை எழுதுகிறேன்.

“அப்போது மீன்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

“எனது வாழ்க்கையில் நான் சாதித்தவற்றுள் இந்தப் படகை வாங்கியதும் இடம்பெறும்,” என்று மாதவன் கூறியுள்ளார்.

திரையுலகில் நல்ல நடிகர் எனப் பெயர் வாங்கி இருந்தாலும், தாம் அதிகம் சம்பாதிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாதவன் நடிப்பில் அண்மையில் ‘சைத்தான்’ என்ற படம் வெளிவந்துள்ளது. அதில் அவர் வில்லனாக நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்