விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் அருந்ததி

1 mins read
3fe951d7-a3a8-4cd4-aac2-66a2a15604e3
அருந்ததி நாயர். - படம்: ஊடகம்

அண்மையில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை அருந்ததி நாயர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 14ஆம் தேதியே அருந்ததி விபத்தில் சிக்கியுள்ளார். அன்று இரவு தமது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் சாலையில் ரத்த வெள்ளத்தில் இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியே சென்ற சிலர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் அருந்ததி நாயர் உடல் நிலை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என அவரது சகோதரி ஆரத்தி நாயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விபத்துநடிகை