ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பஹத் பாசில்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பஹத் பாசில்

1 mins read
a65416d0-2ca5-4d68-8b72-7ca5977321ad
பஹத் பாசில். - படம்: ஊடகம்

ராஜமவுலி மகன் கார்த்திகேயா ஒரே நேரத்தில் மலையாளத்திலும் தமிழிலும் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கிறார்.

மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள மொழி படங்களில் கதாநாயகனாக நடிப்பதுடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி மகன் எஸ்.எஸ். ஆர்.கார்த்திகேயா தனது ‘ஆர்கா மீடியாஸ்’ நிறுவனத்தின் மூலம் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கிறார்.

முதல் படமாக அறிமுக இயக்குநர் ஷாசாங் எல்டி இயக்கத்தில் ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ என்ற படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார்.

தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. 2025ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வருகிறது.

மற்றொரு படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த்தா நடிலா இயக்கும் ‘ஆக்சிசன்’ என்ற படத்திலும் கதாநாயகனாக பஹத் பாசில் நடிக்கிறார்.

தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இவ்வாண்டு தொடங்குகிறது.

இந்த இரண்டு படங்களையும் ராஜமவுலி வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி