வெங்கடே‌‌ஷ் பட்டிற்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜன்

வெங்கடே‌‌ஷ் பட்டிற்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜன்

1 mins read
ec836389-f0b3-4d86-b9df-39f3b1fbc3ca
மாதம்பட்டி ரங்கராஜன். - படம்: ஊடகம்

‘குக் வித் கோமாளி’ 5ம் தொடரின் நிகழ்ச்சியில் இருந்து விலகிய சமையல் நிபுணர் வெங்கடே‌‌ஷ் பட்டிற்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜன் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘பிக்பாஸ் சீசன் 7’ முடிந்த கையேடு, பல ரசிகர்கள் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி குறித்து கேட்கத் துவங்கிவிட்டனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகத் துவங்கியதும் இந்த முறை நான் நடுவர் இல்லை என கையை உயர்த்திய சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட், விரைவில் வேறு ஒரு நிகழ்ச்சியில் மக்களை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட பிரபலங்கள் விலகியதால் நிகழ்ச்சி துவங்குமா என்கிற சந்தேகம் எழுந்தது.

இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று முன்தினம் வெளியான காணொளியில் விரைவில் குக் வித் கோமாளி 5ம் தொடரின் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ள தகவலை உறுதி செய்தது.

மேலும் இந்த முறை வெங்கடேஷ் பட்டிற்கு பதில், பல பிரபலங்களின் விருப்பமான சமையல்காரரான மாதம்பட்டி ரங்கராஜன் தாமுவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக பயணிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ரங்கராஜன் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்தி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பதுடன் இந்நிகழ்ச்சியின் பணிகள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ள நிலையில் மறுபுறம் இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி