மமிதா பைஜூ: அல்லு அர்ஜுன் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பேன்

மமிதா பைஜூ: அல்லு அர்ஜுன் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பேன்

1 mins read
7f4657f0-afd1-4e5d-83c3-528e7dacaefa
அல்லு அர்ஜுன், மமிதா பைஜூ, - படம்: ஊடகம்

‘பிரேமலு’ படத்தில் நடித்த மமிதா பைஜூ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் வெளியான மலையாளப் படம் ‘பிரேமலு’. இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இதில் நடித்த மமிதா பைஜூவை வலைத்தளவாசிகள் கொண்டாடி வருகின்றனர். மேலும், மமிதா பைஜூ பல்வேறு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்த நிலையில், தனக்குப் பிடித்த நடிகர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மமிதா பைஜூ, “அல்லு அர்ஜுனை எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியான படங்களை 10 முறைக்கும் அதிகமாகவே பார்த்திருக்கிறேன். என்றாவது படம் பார்க்கவேண்டும் என்று நினைத்தால் அவர் படங்களையே மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி