தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுஷ்காவுடன் இணையும் விக்ரம் பிரபு

1 mins read
a5fee8a8-a3f4-4ee5-a167-3074a8c3eeec
‘காதி’ படத்தில் அனுஷ்கா. - படம்: ஊடகம்

இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் ‘காதி’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்.

இதுவரை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் மட்டும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் ‘காதி’ என்ற படத்தில் அனுஷ்கா விக்ரம் பிரபுவுடன் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இப்படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்