தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்திய நடிகர் விஜய்

1 mins read
a5b7039b-1221-477a-a7c0-ed4e2c7bbe61
கேரளாவில் ரசிகர்களிடையே வாகனத்தின் மீது ஏறி நின்று பேசிய நடிகர் விஜய். - படம்: ஊடகம்

நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அதைக் கேள்விப்பட்டு குவிந்த ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அவர்களை மகிழ்வித்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் நேற்று திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்து பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அதில், “சேச்சி, சேட்டன்மார், ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்க்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் இருக்கிறீர்கள்!” என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.

விஜய் மலையாளத்தில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்